அதிகார வர்கத்தின் சுயநலம் - பொது நலன் கருதி

பொதுநலன் என்ற பெயரில் அதிகார வர்ககத்தின் சுயநலத்தை `பொது நலன் கருதி' படம் அப்பட்டமாக காட்டும் என்று இயக்குநர் தெரிவித்திருக்கிறார்.
அதிகார வர்கத்தின் சுயநலம் - பொது நலன் கருதி
Published on

'' இங்கே பொதுநலன் என்ற பெயரை குறியீடாய் வைத்து நடந்துகொண்டிருக்கும் அத்தனை செயல்களுக்கும் காரணமாய் இருப்பது அதிகார வர்க்கத்தின் சுயநலன்தான். காலம் காலமாக ஒரு நம்பிக்கையை மக்களிடம் திணிப்பது, பின்பு அதை உண்மை என நம்பவைப்பதற்காக அவர்களையும், அவர்களின் நிறுவனத்தையும் பொது சந்தையில் விளம்பரப்படுத்தி, பிரம்மாண்டாமாய் பிரபலபடுத்திக் கொண்டு, அதன் பின்பு அவர்களை எளிய மனிதர்கள் தங்களின் கோபத்தால் எதுவுமே செய்ய முடியாதபடி கட்டமைத்துக் கொண்டு எப்படி செல்வாக்குள்ள மனிதர்களாய் தங்களை உருவாக்கிக் கொள்கிறார் என்பதினை திரைக்கதையின் மூலமாக எவ்விதமான சமரசத்திற்கும் இடமளிக்காது மக்களுக்கு உண்மையை காட்சிப்படுத்துவதுவே இத்திரைப்படத்தின் முக்கிய நோக்கமாகும் '' என்றார் இப்பட இயக்குனர் சீயோன்.

X

Maalai Malar
www.maalaimalar.com