பிச்சுவா கத்தி

ஐயப்பன் இயக்கத்தில் இனிகோ பிரபாகர், ஸ்ரீபிரியங்கா நடிப்பில் வெளியாகி இருக்கும் `பிச்சுவா கத்தி' படத்தின் விமர்சனம்.
பிச்சுவா கத்தி
Published on

இந்நிலையில், இனிகோ பிரபாகர் தன் நண்பர்களுடன் போதையில் வரும் போது, மேலும் குடிப்பதற்காக ஆட்டை திருடி விற்று மாட்டிக் கொள்கிறார்கள். இந்த குற்றத்திற்காக கும்பகோணத்தில் உள்ள போலீஸ் நிலைத்தில் 30 நாட்கள் கையெழுத்திடும்படி கோர்ட் உத்தரவிடுகிறது.

கும்பகோணம் போலீஸ் அதிகாரி, இவர்களிடம் தலா பத்தாயிரம் வீதம் முப்பதாயிரம் கேட்கிறார். பணம் இல்லாத இவர்கள் மற்றொரு நாயகியான அனிஷாவின் செயினை பறிக்கிறார்கள். ஆனால், அனிஷாவோ இவர்களை போலீசில் சிக்க வைத்து விடுகிறார். இதனால், அனிஷாவை தீர்த்துக்கட்ட இனிகோ பிரபாகர் நினைக்கிறார்.

இந்நிலையில், கும்பகோணத்தில் தாதாவாக இருப்பவர், இனிகோ பிரபாகரை பகடைக்காயாக வைத்து, அமைச்சராக இருக்கும் மொட்டை ராஜேந்திரனிடம் இருந்து விலையுயர்ந்த பொருளை திருட வைக்கிறார். இதை சரியாக செய்து முடித்ததால், இந்த முப்பது நாட்களும் போலீசின் உதவியோடு தாதாவுடன் இனிகோ பிரபாகர் மற்றும் நண்பர்கள் திருடுவது, கொலை செய்வது உள்ளிட்ட வேலைகளை செய்து வருகிறார்கள்.

முப்பது நாட்கள் முடிந்த பின் தங்கள் ஊருக்கு செல்லும் நிலையில், போலீஸ் அதிகாரி நீங்கள் செல்லக்கூடாது தாதாவுடன் இருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார். மீறினால், அனிஷாவின் செயின் திருடின குற்றத்திற்காக உங்களை 7 வருடம் சிறையில் அடைத்து விடுவேன் என்று மிரட்டுகிறார்.

இறுதியில் போலீசின் மிரட்டலுக்கு அடிபணிந்து தாதாவுடன் இருந்தார்களா? இந்த நிலைமைக்கு காரணமான அனிஷாவை கொன்றார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் இனிகோ பிரபாகர் முந்தைய படங்களை விட சிறப்பாகவே நடித்திருக்கிறார். வழக்கம்போல் எதார்த்தமாக நடித்தும், தாவணியில் அழகாக வந்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் ஸ்ரீபிரியங்கா. மற்றொரு கதாநாயகனாக நடித்திருக்கும் செங்குட்டுவன் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். நாயகியாக வரும் அனிஷா துணிச்சலான பெண்ணாக நடித்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களான காளிவெங்கட், பால சரவணன், ரமேஷ் திலக், யோகி பாபு உள்ளிட்ட பலர் சிறப்பாகவே நடித்திருக்கிறார்கள்.

ஒரு ஆக்‌ஷன் கதையில் காதல், சென்டிமென்ட் என கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஐயப்பன். கதாபாத்திரங்களிடம் சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். விறுவிறுப்பான திரைக்கதை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

ரகுநாதன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் சிறப்பாகவே கொடுத்திருக்கிறார். வெங்கடேஷின் ஒளிப்பதிவு சிறப்பு.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com