மம்முட்டியை தாக்கிப் பேசிய பார்வதிமேனன்

கேரளாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகை பார்வதிமேனன், நடிகர் மம்முட்டியை தாக்கிப் பேசியிருக்கிறார்.
மம்முட்டியை தாக்கிப் பேசிய பார்வதிமேனன்
Published on

கேரளாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகை பார்வதிமேனன், ‘சினிமாவில் பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லை’ என்பது குறித்து பேசினார்.

அப்போது மம்முட்டியின் படமான ‘கசபா’ பற்றி குறிப்பிட்ட அவர், “‘கசபா’ படம் பார்த்தேன். அப்படி ஒரு பெரிய நடிகர், பெண்ணிடம் மோசமான வசனம் பேசி இருப்பது அதிருப்தி அளிக்கிறது.

சமூகத்தின் வெளிப்பாடே சினிமா என்கிறார்கள். இது போன்ற ஹீரோவை கொண்டாடலாமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்ய வேண்டும்” என்றார்.

பார்வதியின் இந்த பேச்சை அறிந்த மம்முட்டியின் ரசிகர்கள், அவரை சமூக வலைத்தளங்களில் திட்டித் தீர்த்துள்ளனர். கிண்டல் செய்யும் கருத்துக்களையும் வெளியிட்டு வருகிறார்கள். இதை பார்த்த பார்வதி, ‘நான் சொன்னதில் தவறு எதுவும் இல்லை. நான் பேசியதை தவறாக புரிந்து கொண்டு என்னை திட்டுபவர்கள் நன்றாக திட்டலாம். நன்றாக கிண்டல் செய்யுங்கள்...’ என்று பதில் அளித்துள்ளார்.

பார்வதிமேனனுக்கு பதில் அளித்துள்ள நகைச்சுவை நடிகர் சந்தோஷ் பண்டிட், “சினிமா தயாரிப்பது, இயக்குவது, அதிகம் படம் பார்ப்பவர்கள் எல்லோரும் ஆண்களே. வியாபார நோக்கத்தில் படம் எடுக்கிறார்கள். சமூகத்தை திருத்த அல்ல” என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com