சாதனையை நோக்கி பத்மாவத்: கடும் எதிர்ப்புகளுக்கு இடையிலும் 2 நாட்களில் ரூ.50 கோடி வசூல்

பலதரப்பினரின் எதிர்ப்புகளுக்கு இடையில் இரண்டு நாட்களில் 50 கோடி ரூபாயை வசூலித்துள்ள ’பத்மாவத்’ திரைப்படம் விரைவில் 100 கோடி என்ற இலக்கை தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Padmaavat #DeepikaPadukone
சாதனையை நோக்கி பத்மாவத்: கடும் எதிர்ப்புகளுக்கு இடையிலும் 2 நாட்களில் ரூ.50 கோடி வசூல்
Published on

புதுடெல்லி:

தீபிகா படுகோனே நடிப்பில் பல்வேறு தடைகளை கடந்து தணிக்கை சான்றிதழ் பெற்ற ’பத்மாவத்’ திரைப்படத்தை குஜராத், ராஜ்ஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்களில் உள்ள மல்ட்டிபிளெக்ஸ் மற்றும் திரையரங்கங்கள் வெளியிட மறுத்து விட்டன. அரியானா, பீகார் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் சில திரையரங்கங்கள் மட்டுமே படத்தை வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை வெளியான ’பத்மாவத்’ திரைப்படம் முதல் நாளன்று இந்தியாவில் 19 கோடி ரூபாய் வசூல் செய்தது. வெள்ளிக்கிழமை வசூல் 30 கோடியாக உயர்ந்தது. நேற்றுவரை உள்நாட்டு வசூலாக 49 கோடி ரூபாயை அள்ளியுள்ள ’பத்மாவத்’ சனி, ஞாயிற்றுக்கிழமைக்குள் மேலும் ஒரு 51 கோடி ரூபாயை சம்பாதித்து முதல் நான்குநாள் வசூலாக 100 கோடி ரூபாயை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா தவிர பல வெளிநாடுகளில் ஆயிரத்திற்கும் அதிகமான திரையரங்களில் ’பத்மாவத்’ வெளியாகியுள்ளது. அங்கும் இந்த படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் வசூலில் இந்த படம் மிகப்பெரிய சாதனையை உருவாக்கும் என பாலிவுட் வட்டாரங்கள் கருதுகின்றன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com