முதல் கட்டத்தை தாண்டிய சரத்குமார்

ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் சரத்குமார் நடித்து வரும் ‘பாம்பன்’ படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்துள்ளது. #Paamban
முதல் கட்டத்தை தாண்டிய சரத்குமார்
Published on

‘ஏய், சாணக்யா, சண்டமாருதம்’ போன்ற படங்களில் இணைந்து பணியாற்றிய சரத்குமார் – இயக்குனர் ஏ.வெங்கடேஷ், மீண்டும் ‘பாம்பன்’ என்ற படத்திற்காக கூட்டணி அமைத்துள்ளனர். இப்படத்தில் சரத்குமார் வித்தியாசமான வேடத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்பே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்ஸ் வெளியானது. இந்த போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமில்லாமல், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமாரின் மகள் வரலட்சுமியும் நடிக்கிறார். 

ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து வரும் இதற்கு என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இதனை தயாரித்து வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இதன் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது. அடுத்தக் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com