

ட்ரான்ஸ் இந்தியா மீடியா நிறுவனத்தின் சார்பில் திரு.இராஜேந்திரன், எம்.இராஜன் அவர்களின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் முதல் படம் `நாகேஷ் திரையரங்கம்'.
ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட `அகடம்' திரைப்படத்தை இயக்கி கின்னஸ் சாதனை படைத்த இசாக் இயக்கியுள்ள திரைப்படம் இது.
`நெடுஞ்சாலை', `மாயா' பட புகழ் ஆரி கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஆஷ்னா சவேரி நடித்திருக்கிறார். காளி வெங்கட், மும்பை மாடல் மாசூம் சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சிறிய இடைவேளைக்குப் பின் இந்த படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் எம்.ஜி.ஆர்.லதாவும், நடிகை சித்தாராவும் நடித்திருக்கிறார்கள். நௌஷாத் ஒளிப்பதிவில், ஸ்ரீ இசையில், தேவராஜ் படத்தொகுப்பில் உருவாகியுள்ள `நாகேஷ் திரையரங்கம்' வருகிற பிப்ரவரி 16-ஆம் தேதி ரிலசாகிறது.
தமிழ் சினிமாவில் இன்று வரையிலும் எண்ணற்ற திகில் படங்களும் பேய் படங்களும் வந்திருந்தாலும், அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்ட விதத்தில் கதையும், திரைக்கதையும் அமைத்துள்ளார் இயக்குனர் இசாக். திரையரங்கில் பேய் என்னும் புதிய கோணத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம், திகில் பட பிரியர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் என்று இயக்குநர் கூறியிருக்கிறார்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற நிலையில், `உங்க அப்பா கிட்ட பேசல' என்ற பாடல் வரிகள் அடங்கிய வீடியோவை இயக்குநர் பா.இரஞ்சித் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுகிறார்.