மருத்துவ குற்றத்தை சொல்ல வரும் ஔடதம்

ரமணி இயக்கத்தில் மனிதர்களுக்கு ஊறுவிளைவிக்கும் மருந்துகளைத் தயாரித்து அதை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது உள்ளிட்ட மருத்துவ குற்றத்தை சொல்ல வரும் மெடிக்கல் திரில்லர் படமாக ஔடதம் உருவாகியிருக்கிறது.
மருத்துவ குற்றத்தை சொல்ல வரும் ஔடதம்
Published on

மனிதர்களுக்கு ஊறுவிளைவிக்கும் மருந்துகளைத் தயாரித்தல் அதனை அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் உதவியுடன் சட்டவிரோதமாக் சந்தைப்படுத்துதல் என்று விரியும் மெடிக்கல் திரில்லர் வகைப்படமான ஒளடதத்தைத் திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்  ரமணி.

சென்னையைச் சேர்ந்த பிரபல நீரிழிவு மருத்துவரின் சுயலாபத்திற்காக, நடுத்தர மக்கள் பயன்படுத்தும் மருந்து தடைசெய்யப்பட்டு மீண்டும் பயன்பாட்டிற்கு வந்த 10 நாட்களுக்குள் நடக்கும் விறுவிறுப்பான சம்பவங்களை சொல்லி விழிப்புணர்வு செய்திருக்கிறார் இயக்குநர் ரமணி.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அண்ணன் மகன் சண்முகசுந்தரம் இந்தப்படம் மூலம் பாடலாசிரியராக அறிமுகமாகிறார். சிங்கப்பூர் கலைவேந்தன், தமிழமுதன், சோ.சிவாகுமார் பிள்ளை, விஜயகிருஷ்ணன் ஆகியோர் பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் தஷி இசையில் உருவான இந்தப் படத்தின் பாடல்களை இயக்குநர் பேரரசு வெளியிட குரங்குபொம்மை இயக்குநர் நித்திலன் பெற்றுக்கொண்டார்.

விழாவில் கில்டு செயலாளர் ஜாக்குவார் தங்கம் மற்றும் ஸ்ரீராம், கே.வி.குணசேகர், மக்கள் தொடர்பாளர் சங்க பொருளாளர் விஜயமுரளி, பெருதுளசி பழனிவேல், ரஞ்சன், தமிழமுதன், திருமலை சிவம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நாயகியாக டெல்லியைச் சேர்ந்த மாடல் சமீரா, இரண்டாவது நாயகனாக சந்தோஷ் நடித்திருக்கிறார்கள். கீழக்கரை அஜ்மல்கான், இந்தப்படத்தை வெளியிடுகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com