அடுத்தடுத்து இரு பேய் படங்களில் நடிக்கும் ஓவியா

`யாமிருக்க பயமே' படத்தை இயக்கிய டிகே அடுத்ததாக இயக்கவிருக்கும் காட்டேரி படத்தில் ஆதி சாய்குமார் - ஓவியா இணைந்து நடிக்க உள்ளனர்.
அடுத்தடுத்து இரு பேய் படங்களில் நடிக்கும் ஓவியா
Published on

த்ரில்லர் கலந்த காமெடி படமாக வெளியான இந்த படத்தில் கிருஷ்ணா, ரூபா, ஓவியா, கருணாகரன் முக்கிய கதபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இந்நிலையில், 3 வருட இடைவேளைக்குப் பிறகு டிகே அடுத்ததாக இயக்கவிருக்கும் புதிய படத்திற்கு `காட்டேரி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நாயகனாக ஆதித்யா சாய்குமார் அறிமுகமாகிறார். நாயகியாக ஓவியா நடிக்கிறார்.

காமெடி கலந்த பேய் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.வி.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com