தஞ்சாவூர் மக்களை நெகிழ்ச்சியடைய வைத்த ஓவியா

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற நடிகை ஓவியா, களவாணி 2 படப்பிடிப்பில் கலந்துக் கொண்டு தஞ்சாவூர் மக்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளார். #Oviya
தஞ்சாவூர் மக்களை நெகிழ்ச்சியடைய வைத்த ஓவியா
Published on

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ்நாட்டு ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தவர் நடிகை ஓவியா. அந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியாவை தேடி வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் அவர் தேர்ந்தெடுத்தது மூன்று படங்கள் தான். களவாணி 2, 90 எம்.எல், மற்றும் காஞ்சனா -3. இவற்றில் 90 எம்.எல். என்பது ஓவியா கதை நாயகியாக நடிக்கும் படம். இந்த படம் முடிந்துவிட்டது.

காஞ்சனா-3 லாரன்ஸ் இயக்கத்தில் நடிக்கும் படம். இந்த படத்துக்கு ஒரு பாடல் மட்டும் எடுக்க வேண்டி இருக்கிறது. அடுத்து ஓவியா மிகவும் எதிர்பார்க்கும் படம் களவாணி -2. சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற களவாணி படத்தின் தொடர்ச்சி இது. 

இந்த படத்தில் ஓவியாவுக்கு கனமான வேடம். இதற்காக நேற்று முதல் தஞ்சாவூரில் முகாமிட்டுள்ளார் ஓவியா. முந்தைய களவாணி எடுத்த இடங்களில் தான் படப்பிடிப்பு என்பதால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் ஓவியாவை தேடிவந்து பார்த்து படம் எடுத்துக்கொள்கிறார்கள். ஓவியாவும் நெகிழ்ச்சியுடன் அவர்களிடம் பேசுகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com