நாச்சியார் பட விவகாரம்: ஜோதிகா-பாலா மீது மற்றுமொரு வழக்கு

நாச்சியார் படத்தில் சர்ச்சைக்குரிய வசனம் பேசியதாக நடிகை ஜோதிகா மற்றும் இயக்குநர் பாலா மீது கரூர் நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நாச்சியார் பட விவகாரம்: ஜோதிகா-பாலா மீது மற்றுமொரு வழக்கு
Published on

டைரக்டர் பாலாவின் நாச்சியார் திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் நடிகை ஜோதிகா தகாத வார்த்தையில் பேசிய வசன காட்சி இடம் பெற்றுள்ளது.

இதை பார்த்த மேட்டுப்பாளையம் அன்னூர் ரோடு புளுஹில்ஸ் பகுதியை சேர்ந்த டிரைவர் ராஜன் மேட்டுப்பாளையம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நாளை 28-ந்தேதி விசாரணைக்கு வர உள்ளது.

இந்நிலையில் கரூர் குற்றவியல் கோர்ட்டில் நடிகை ஜோதிகா, டைரக்டர் பாலா மீது மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை இந்திய குடியரசு கட்சியின் (ராம்தாஸ் அத்வாலே) மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் தொடர்ந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், நாச்சியார் படத்தில் நடிகை ஜோதிகா பெண்களை அவதூறாகவும், ஆபாசமாகவும் திட்டுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. எனவே ஜோதிகா மீதும், அப்படத்தின் டைரக்டர் பாலா மீதும் இந்திய தண்டனை சட்டம் 294 (பி), ஐ.டி. சட்டம் 2015 ஆகிய பிரிவுகளின் கீழ் 2பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த வழக்கு விசாரணையை மாஜிஸ்திரேட் பாக்கியம் நாளை மறுநாள் 29-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com