சூர்யா - ஜோதிகாவுக்கு நன்றி தெரிவித்த நிவின்பாலி

ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் காயம்குளம் கொச்சுண்ணி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட சூர்யா மற்றும் ஜோதிகாவுக்கு நிவின் பாலி நன்றி தெரிவித்துள்ளார்.
சூர்யா - ஜோதிகாவுக்கு நன்றி தெரிவித்த நிவின்பாலி
Published on

‘36 வயதினிலே’ படத்தை இயக்கிய ரோ‌ஷன் ஆன்ட்ரூஸ் இயக்கும் இந்த படத்தில் கொச்சுண்ணியாக நிவின் பாலி நடிக்கிறார். கதாநாயகியாக அமலாபால் நடிக்கிறார். புகழ்பெற்ற திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதிய பாபி, சஞ்சய் ஆகியோர் இந்த படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளனர்.

‘காயம்குளம் கொச்சுண்ணி’, 19-ம் நூற்றாண்டில் கேரளாவில் உள்ள காயம்குளம் பகுதியில் வாழ்ந்த ஒருவரை பற்றிய படம். இவர் ராபின்ஹுட் போல செல்வந்தர்களிடம் இருந்து பணம், பொருள்களை பறித்து நலிந்த மக்களுக்கு வழங்கி வந்துள்ளார்.

1859-ல் கொச்சுண்ணி போலீசாரால் கைது செய்யப்பட்டு பூஜப்புரா ஜெயிலில் அடைக்கப்பட்டு அங்கேயே இயற்கை எய்தினார். இவருடைய வாழ்க்கையில் இடம் பெற்ற சம்பவங்களை மையமாக வைத்து உருவாகி வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை சூர்யா - ஜோதிகா நேற்று வெளியிட்டுள்ளனர்.

சூர்யா - ஜோதிகாவின் இந்த வருகைக்கு நடிகர் நிவின் பாலி அவரது பேஸ்புக் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com