இயக்குனரை உட்கார வைத்து ரவுண்டடித்த நிவேதா பெத்துராஜ்

திமிரு புடிச்சவன் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நிவேதா பெத்துராஜ், இயக்குனரை உட்கார வைத்து படப்பிடிப்பில் ரவுண்டடித்தேன் என்று கூறியிருக்கிறார். #Thimirupudichavan
இயக்குனரை உட்கார வைத்து ரவுண்டடித்த நிவேதா பெத்துராஜ்
Published on

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கும் படம் திமிரு புடிச்சவன். கணேஷா இயக்கியிருக்கும் இந்த படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் விஜய் ஆண்டனி, நிவேதா பெத்துராஜ், இயக்குனர் கணேஷா உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

நிவேதா பெத்துராஜ் பேசும்போது, ‘கதையை சொல்லும்போதே இயக்குனர் கணேஷா என்னை பயமுறுத்தி விட்டார். புல்லட் ஓட்டணும்னு சொன்னார். அதை கற்றுக் கொண்டு ஓட்டினேன். படப்பிடிப்பில் இயக்குனரை உட்கார வைத்து ஓட்டி காட்டினேன். பின்னர் விஜய் ஆண்டனியை வைத்து ஓட்டினேன். திடீரென மீன் பாடி வண்டி ஓட்ட சொன்னார். டப்பிங்கில் படத்தை பார்த்தபோது எனக்கே வித்தியாசமாக இருந்தது. நான் நடித்ததிலேயே என்னுடைய முக்கியமான படமாக இருக்கும்’ என்றார்.

பாத்திமா மேடம் 7 மணி நேரம் கதையை கேட்டார், நல்லா இருக்கு என்று சொல்லி, தொடர்ந்து முழுக்கதையையும் கேட்டார். விஜய் ஆண்டனி சார் படங்களுக்கு இதுவரை பூஜை போட்டதே இல்லை. ஆனால் எனக்காக பூஜை போட்டார். நான் கேட்ட எல்லா விஷயங்களையும்  செய்து கொடுத்தார் விஜய் ஆண்டனி சார். என்னை முழுமையாக மதித்தார். ஒரு தயாரிப்பாளர் கதை நல்லா இருக்கு, கதையை மட்டும் வச்சிக்கிட்டு வேற இயக்குனர் வச்சி படத்தை பண்ணலாம் என சொன்னார். 

ஆனால் விஜய் ஆண்டனி சார் தோல்வி அடைஞ்சவர் தான் நல்ல படத்தை கொடுப்பார் என சொல்லி நான் தான் இயக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். நான் பெரிய நடிகர்களை கேட்டு பெரிய லிஸ்ட் கொடுத்தேன். அவர் புகழ் வெளிச்சம் படாத நல்ல திறமையான நடிகர்களை நடிக்க வைக்கலாம் என சொன்னார். அவர்கள் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அவர் நம்பிக்கை வீண் போகாது என்றார் இயக்குனர் கணேஷா.

தனிமரம் தோப்பாகாது என்பது போல இதில் என் பங்கு குறைவு தான். எந்த ஒரு படத்திலும் இயக்குனர் தான் ஹீரோ. இந்த படத்தை உருவாக்க கணேஷா சார் மிகக்கடுமையாக உழைத்திருக்கிறார். கடந்த இரண்டு படங்கள் வியாபரா ரீதியாக சரியாக போகவில்லை.  படத்தின் வேலை முடிந்ததால் தீபாவளிக்கு ரிலீஸ் செய்கிறோம். இயக்குனருக்காக தீபாவளிக்கு ரிலீஸ் செய்கிறோம். இந்த படத்தில் ரொமான்ஸ் இல்லை, இந்த படத்துக்கு பிறகு ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க பயிற்சி எடுக்க இருக்கிறேன் என்றார் நடிகர் விஜய் ஆண்டனி.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com