கூடுதல் பலம் கிடைத்த சந்தோஷத்தில் நிதின் சத்யா

நடிகரான நிதின் சத்யா தற்போது தயாரித்து வரும் ‘ஜருகண்டி’ படத்தில் கூடுதல் பலம் கிடைத்திருப்பதால் மிகவும் சந்தோஷத்தில் ஆழ்ந்திருக்கிறார்.
கூடுதல் பலம் கிடைத்த சந்தோஷத்தில் நிதின் சத்யா
Published on

நடிகரும் தயாரிப்பாளருமான நிதின் சத்யா தனது சொந்த பட நிறுவனம் மூலம் "ஜருகண்டி" என்கிற திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இதில் ஜெய் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரெபா மோனிகா ஜான் என்பவர் நடிக்கிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. திடீர் என்று இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வந்த அரவிந்த் கிருஷ்ணா சில காரணங்களால் விலகினார். தற்போது இவருக்கு பதிலாக பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். 

இதுகுறித்து நிதின் சத்யா கூறும்போது, ‘திட்டமிட்டபடியே எங்கள் படப்பிடிப்பு துல்லியமாக நடைப்பெற்றுக் கொண்டு இருக்கிறது. எங்களது படப்பிடிப்பு குழுவில் புதிதாக இணைந்து உள்ள ஒளிப்பதிவு இயக்குனர் ஆர்.டி.ராஜசேகரின் அனுபவமும், திறமையும் எங்களை போன்ற இளைஞர்களை ஊக்குவிக்கும். அவரது தொழில் நுட்பம் உலக தரத்துக்கு இணையானது. அதுவே எங்களுக்கு பெருமை" என்றார். 

இளம் இசை அமைப்பாளர் போபோ சஷி இசை அமைக்க, பிரவீன் கே எல் படத்தொகுப்பில், அமித் குமார் திவாரி வில்லனாக நடிக்க அவருடன் ரோபோ ஷங்கர், இளவரசு, காவ்யா ஷா, ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தை ஸ்ரதா என்டர்டெயின்மென்ட் பத்ரி கஸ்தூரி இணைந்து தயாரித்து வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com