சிறுவர்களை சந்தோஷத்தில் ஆழ்த்திய நிக்கி கல்ராணி

கோவையில் துணிக்கடை திறப்பு விழாவில் கலந்துக் கொண்ட நிக்கி கல்ராணி, அங்கு வந்த சிறுவர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி இருக்கிறார். #NikkiGalrani
சிறுவர்களை சந்தோஷத்தில் ஆழ்த்திய நிக்கி கல்ராணி
Published on

தமிழில் ‘டார்லிங்’, ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘மரகத நாணயம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை நிக்கி கல்ராணி. தற்போது இவரது நடிப்பில் ‘கீ’, ‘சார்லி சாப்ளின் 2’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 

இந்நிலையில், கோவையில் துணிக்கடை திறப்புவிழாவில் நடிகை நிக்கி கல்ராணி கலந்துகொண்டார். அவரை பார்ப்பதற்க்கு ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனர். ஆண்களும், பெண்களும் அவருடன் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய நிக்கி கல்ராணி, ‘கோவை எனக்கு பிடித்தமான ஊர். இந்த மக்களையும் ரொம்ப பிடிக்கும். என்னைப் பார்ப்பதற்கு இவ்வளவுபேர் வந்திருப்பது மிகவும் சந்தோசம், உங்கள் அன்புக்கு என்றும் நான் கடமைப்பட்டுள்ளேன்’ என்றார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிறுவர்களுக்கு துணிகளை பரிசுகளாக வழங்கி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அவர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com