சங்கமித்ரா படத்தின் புதிய தகவல்

கலகலப்பு 2 படத்தை அடுத்து சுந்தர்.சி இயக்கத்தில் ஜெயம் ரவி, ஆர்யா நடிப்பில் உருவாக இருக்கும் ‘சங்கமித்ரா’ படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. #Sangamithra
சங்கமித்ரா படத்தின் புதிய தகவல்
Published on

‘கலகலப்பு 2’ படத்திற்கு பிறகு சுந்தர்.சி இயக்கவுள்ள புதிய படம் ‘சங்கமித்ரா’. இதில் ஆர்யா, ஜெயம் ரவி கதாநாயகன்களாக நடிக்கவுள்ளனர். நாயகியாக ‘எம்.எஸ்.தோனி’ புகழ் திஷா பதானி நடிக்கவுள்ளார்.

8-ஆம் நூற்றாண்டை சேர்ந்த அழகியான ‘சங்கமித்ரா’ தனது ராஜ்ஜியத்தை காப்பாற்றுவதற்காக எதிர்கொள்ளும் துயரங்களும், சோதனைகளுமே இப்படத்தின் மையக்கருவாக உருவாக்கப்பட்டுள்ளது. 

இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் ரூ.400 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கவுள்ளது. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகவிருக்கும் இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். பீட்டர் ஹையின் சண்டைப் பயிற்சி அளிக்க இருக்கிறார். தேசிய விருது பெற்ற பலர் இப்படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளார்கள்.

ஏற்கெனவே, படத்தின் முன்னணி பணிகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தற்போது படத்தின் ஷூட்டிங்கை வருகிற ஆகஸ்ட் மாதம் துவங்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு கேன்ஸ் பிலிம் பெஸ்டிவலில் படத்தின் அறிமுக விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com