இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் கிளாப் அடித்து துவக்கி வைத்த பேப்பர் பாய்

பிரபல இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் கிளாப் அடித்து பேப்பர் பாய் என்ற படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்துள்ளார்.
இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரனுடன் படக்குழுவினர்
இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரனுடன் படக்குழுவினர்
Published on

சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல், சத்ரியன் ஆகிய படங்களை இயக்கியவர் எஸ்.ஆர்.பிரபாகரன். இவர் தற்போது சசிகுமாரை வைத்து கொம்பு வச்ச சிங்கம்டா படத்தை இயக்கி வருகிறார். தற்போது இவர் சுவாதிஷ் பிக்சர்ஸ் சார்பாக பழனிராஜன் தயாரிக்கும் ‘பேப்பர் பாய்’ படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்துள்ளார்.

விஜய் மில்டனிடம் கடுகு, கோலிசோடா 2 போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய ஸ்ரீதர் கோவிந்தராஜ் இப்படத்தை இயக்குகிறார். இதில் நாயகனாக சுவாதிஷ் ராஜா, நாயகியாக யாமினி பாஸ்கர், முக்கிய கதாபத்திரத்தில் வடிவுக்கரசி, தலைவாசல் விஜய், சுஜாதா, ரேகா, சரவணன், எம்ஜிஆரின் பேரன் ராமச்சந்திரன், அக்ஷயா, பாலா, அமுதவாணன் ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். அருணகிரி இசையமைக்க, ஜெகதீஷ் வி.விஸ்வா ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். 

அன்றாடம் பேப்பர் போட்டு வாழ்க்கை நடத்தும் இளைஞனுக்கும் கோடீஸ்வர நாயகிக்கும் உருவாகும் காதல், அதனால் அவர்கள் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் தான் இப்படத்தின் கதையாக உருவாக்கி இருக்கிறார்கள். தமிழில் காதல் கோட்டை, காதலுக்கு மரியாதை இவ்வரிசையில் இப்படம் உருவாக இருப்பதாக படக்குழுவினர் கூறியுள்ளனர். 

இதன் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கி, கேரளா மற்றும் கர்நாடகாவில் தொடர்ந்து நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com