நெருப்புடா

அசோக்குமார் இயக்கத்தில் விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘நெருப்புடா’ படத்தின் முன்னோட்டம்.
நெருப்புடா
Published on

நாயகன் விக்ரம் பிரபு தீயணைப்பு வீரராகவும், நாயகி நிக்கி கல்ராணி மருத்துவராகவும் நடித்துள்ளனர். வருண், ராஜேந்திரன், நாகினேடு, ஆடுகளம் நரேன், மதுசூதன் ராவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இசை - ஷான் ரோல்டன், ஒளிப்பதிவு - ஆர்.டி.ராஜசேகர், படத்தொகுப்பு - தியாகு, கதை, திரைக்கதை, இயக்கம் - அசோக்குமார்.

இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து விக்ரம் பிரபு கூறுயதாவது,

இது தீயணைப்புதுறை பின்னணியில் மனித உணர்வுகளை பேசும் கமர்ஷியல் படம். தீ சம்பந்தப்பட்ட காட்சியை ஈ.வி.பி.கார்டனில் 150 குடிசை செட்போட்டு, நூற்றுக்கணக்கான துணை நடிகர்களைக் கொண்டு எடுத்தோம். தகுந்த முன்னேற்பாடு, பாதுகாப்புடன் படப்பிடிப்பை தொடங்கினோம். என்றாலும், சில காட்சிகளில் தீயில் சிக்கும் அபாயம் இருந்தது. அதிர்ஷ்டவசமாக, லாவகமாக தப்பினேன். ஆண்டவன் புண்ணியத்தில் யாருக்கும் காயம் ஏற்படாமல் படத்தை முடித்தது மகிழ்ச்சி.

தீயணைப்பு வீரனாக சில காட்சிகளில் நடிக்கவே எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. உண்மையான தீயணைப்பு வீரர்களின் சேவை, தியாகம் மகத்தானது. இந்த படம் வெளியானதும் தீயணைப்பு படை வீரர்களைப் பார்த்தால் மக்கள் சல்யூட் அடிப்பார்கள். இவ்வாறு கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com