

‘அன்னை பிலிம் பேக்டரி’ சார்பில் ஆண்டனி தயாரித்துள்ள இப்படத்தில் சூரி, ஹரிஷ் உத்தமன், அப்புக்குட்டி, அருள்தாஸ், துளசி, சாதிகா உள்பட பலர் நடித்துள்ளனர். ஆக்ஷன் கலந்த குடும்ப படமாக உருவாகி இருக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருக்கிறார்.
தணிக்கைக் குழுவில் யு/ஏ சான்றிதழை பெற்றுள்ள இப்படம் தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தீபாவளிக்கு விஜய் நடிப்பில் `மெர்சல்' படமும், அர்ஜுன் இயக்கத்தில் `சொல்லிவிடவா', பரத் நடிப்பில் பொட்டு உள்ளிட்ட படங்கள் ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘நெஞ்சில் துணிவிருந்தால்’ நவம்பர் 3-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக புதிய போஸ்டரை இயக்குநர் சுசீந்திரன் அவரது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.