சி.பி.ஐ. அதிகாரியாக கலக்கும் நயன்தாரா

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நயன்தாரா சி.பி.ஐ. அதிகாரியாக நடித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #ImaikkaNodigal #Nayanthara
சி.பி.ஐ. அதிகாரியாக கலக்கும் நயன்தாரா
Published on

நயன்தாரா வழக்கமான காதல், காமெடி படங்களில் இருந்து விலகி வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களில் நடிக்கிறார். நல்ல கதைகளுடன் வரும் புதுமுக இயக்குனர் படங்களையும் ஒப்புக்கொள்கிறார். இதனால் நாயகர்களுக்கு இணையாக பேசப்படுகிறார்.

நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வந்த அனைத்து படங்களுமே அவரது கதாபாத்திரத்தை உயர்த்தி இருந்தன. அறம் படத்தில் கலெக்டராக வந்தார். ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்க அரசியல்வாதிகளை எதிர்த்து நின்று போராடும் அவரது கலெக்டர் கதாபாத்திரத்துக்கு பாராட்டுகள் குவிந்தன.

தற்போது ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் துணிச்சலான சி.பி.ஐ. அதிகாரியாக வருகிறார். இந்த கதாபாத்திரத்துக்காக தலைமுடியை குறைக்க சம்மதித்தாராம். அவரது சி.பி.ஐ. அதிகாரி தோற்றங்களை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். அந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளன. இதில் நயன்தாராவின் கணவராக விஜய் சேதுபதி கவுரவ தோற்றத்தில் வருகிறார். அவரது தம்பியாக அதர்வா நடித்துள்ளார். இந்தி நடிகர் அனுராக் காஷ்யப் வில்லனாக வருகிறார்.

இந்த படமும் நயன்தாராவின் திரையுலக வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும் என்கின்றனர். கோலமாவு கோகிலா, கொலையுதிர்காலம் என்று மேலும் 2 கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நயன்தாரா நடிக்கிறார். கோலமாவு கோகிலா படத்தில் காமெடி நடிகர் யோகி பாபுவுடன் காதல் பாடலில் நடித்து இருந்தார். அந்த பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

மேலும் அஜித்துடன் விஸ்வாசம், சிரஞ்சீவியுடன் சயீரா நரசிம்ம ரெட்டி, அறிவழகன் இயக்கத்தில் த்ரில்லர், சர்ஜுன் இயக்கத்தில் ஒரு படம் என அடுத்தடுத்து பிசியாகி இருக்கிறார். #ImaikkaNodigal #Nayanthara

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com