நவம்பரில் நயன்தாராவுக்கு திருமணம்?

நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனும் காதலித்து வரும் நிலையில், இந்த வருட இறுதியில் இருவருக்கும் திருமணம் நடக்க இருப்பதாக, இருவருக்கும் நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். #Nayanthara #VigneshShivn
நவம்பரில் நயன்தாராவுக்கு திருமணம்?
Published on

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் நயன்தாரா பேசும்போது, “எனது வருங்கால கணவருக்கு நன்றி” என்று சொன்ன வார்த்தை சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதன்மூலம் விக்னேஷ் சிவனுடன் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதை அவர் உறுதிப்படுத்தி இருப்பதாக கூறப்பட்டது.

கேரளாவில் உள்ள அவரது வீட்டில் குடும்பத்தினர் மட்டும் பங்கேற்க ரகசியமாக நிச்சயதார்த்தம் நடத்தியதாக தகவல் கசிந்துள்ளது. நிச்சயதார்த்தம் முடிந்த பிறகே இருவரும் அமெரிக்காவுக்கு பறந்து ஜாலியாக சுற்றிவிட்டு கேரளா திரும்பி உள்ளனர். அமெரிக்காவில் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் டுவிட்டரில் வெளியிட்டனர்.

இந்த படங்கள் குறித்த கேள்விக்கு, “நான் ஆசீர்வதிக்கப்பட்டு இருக்கிறேன்” என்று விக்னேஷ் சிவன் பதில் அளித்தார். நயன்தாராவுக்கு இப்போது இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோலமாவு கோகிலா, தெலுங்கில் ‘சை நரசிம்ம ரெட்டி’ என்று கைநிறைய படங்கள் இருக்கிறது. அஜித்குமாரின் விசுவாசம் படத்துக்கும் ஒப்பந்தமாகி உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com