பெரிய கதாநாயகர்களை ஒதுக்கும் நயன்தாரா

நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாரா, இனி பெரிய கதாநாயகர்களுக்கு ஜோடியாகி காதல் காட்சிகளில் நடிப்பது இல்லை என்று முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. #Nayanthara
பெரிய கதாநாயகர்களை ஒதுக்கும் நயன்தாரா
Published on

நயன்தாரா, ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை காப்பாற்ற போராடும் கலெக்டராக நடித்து சமீபத்தில் வெளியான ‘அறம்’ படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் குவித்தது. நயன்தாராவின் நடிப்புக்கும் பாராட்டுகள் குவிந்தது. இந்த படத்தில் கதாநாயகன் இல்லை. இனிமேல் பெரிய கதாநாயகர்கள் ஜோடியாகி காதல் காட்சிகளில் நடிப்பது இல்லை என்று நயன்தாரா முடிவு எடுத்து இருக்கிறார்.

‘அறம்’ படத்துக்கு பிறகு கதை தேர்விலும் அவர் அக்கறை எடுக்கிறார். தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளாக தேடுகிறார். ‘ஈரம்,’ ‘குற்றம் 23’ படங்களை இயக்கி பிரபலமான அறிவழகன் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதையொன்றை நயன்தாராவுக்கு சொல்லி இருக்கிறார். அது அவருக்கு பிடித்து இருக்கிறது. எனவே அந்த படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார்.

இந்த கதை மலையாள நடிகை மஞ்சுவாரியாருக்காக உருவாக்கப்பட்டது என்று தகவல் வெளியானது. இதனை அறிவழகன் மறுத்துள்ளார். மஞ்சுவாரியாருக்கு சொன்ன கதை வேறு. நயன்தாராவிடம் சொன்ன கதை வேறு என்றார். நயன்தாராவுக்காக உருவாக்கிய கதை உளவியல் சார்ந்தது என்றும் மஞ்சுவாரியாருக்காக உருவாக்கியது திகில் கதை என்றும் கூறினார்.

படப்பிடிப்புக்கான வேலைகள் தொடங்கி உள்ளதாகவும் விரைவில் அறிவழகன் படத்தில் நயன்தாரா நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. நயன்தாரா கைவசம் உள்ள இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோலமாவு கோகிலா ஆகிய படங்களும் அவரது கதாபாத்திரத்துக்கு முக்கியம் அளிக்கும் கதையம்சம் கொண்டவை. நயன்தாரா தமிழ் பட உலகில் நம்பர்-1 கதாநாயகி இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டு இருக்கிறார். சம்பளமும் ரூ.3 கோடியை தாண்டி இருக்கிறது. புதிய படத்தில் நடிக்க இருப்பதை தொடர்ந்து நயன்தாரா அமிர்தசரஸ் பொற்கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார். #Nayanthara

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com