தேசிய விருது பெற்ற பிரபல நடிகை சுரபியுடன் சோதனை சாவடி ஊழியர்கள் மோதல்

தேசிய விருது பெற்ற பிரபல மலையாள நடிகை சுரபி லட்சுமியுடன் சோதனை சாவடி ஊழியர்கள் மோதலில் ஈடுபட்டனர்.
தேசிய விருது பெற்ற பிரபல நடிகை சுரபியுடன் சோதனை சாவடி ஊழியர்கள் மோதல்
Published on

நேற்று அவர் ஒரு நிகழ்ச்சிக்காக தனது குழுவினருடன் காரில் சென்றார். பள்ளியக்கரா சோதனைச்சாவடியில் அவர்கள் சென்றபோது அந்த சோதனைச் சாவடியில் வாகன நெரிசல் அதிகமாக இருந்தது. அங்குள்ள ஊழியர்கள் மெத்தனமாக வாகன வசூல் செய்ததால் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்று ஊர்ந்து சென்றன.

இதை பார்த்த நடிகை சுரபி லட்சுமி, காரில் இருந்து இறங்கி சோதனைச்சாவடி ஊழியர்களை கண்டித்தார். விரைவாக வாகன வசூல் செய்து போக்குவரத்தை சீர் செய்யுமாறு அவர் கூறினார். இதனால் சுரபி லட்சுமிக்கும், சோதனை சாவடி ஊழியர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு மோதலானது. பின்னர் அங்கிருந்தவர்கள் சமரசப்படுத்தி நடிகை சுரபி லட்சுமியை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

நடிகை சுரபி லட்சுமியுடன், சோதனை சாவடி ஊழியர்கள் மோதிய வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சுரபிலட்சுமியும் தனது பேஸ்புக்கில் மோதல் காட்சிகளை பதிவு செய்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com