`கலகலப்பு-2' கூட்டணியில் இணைந்த நந்திதா

சுந்தர்.சி. இயக்கத்தில் உருவாகி வரும் `கலகலப்பு-2' படத்தில் ஏற்கனவே பல முன்னணி நடிகர்கள் இருக்கும் நிலையில், நந்திதாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
`கலகலப்பு-2' கூட்டணியில் இணைந்த நந்திதா
Published on

சுந்தர்.சி இயக்கி வரும் இந்த படத்தில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி, கேத்தரின் தெரசா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் ராதா ரவி, வி.டி.வி கணேஷ், யோகி பாபு, ரோபோ சங்கர், மனோபாலா, சிங்கம் புலி, வையாபுரி, சந்தான பாரதி, அனு மோகன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

இந்த கூட்டணியில் நடிகை நந்திதா ஸ்வேதாவும் இணைந்திருக்கிறார். இந்த படத்தில் நந்திதா சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவலை நந்திதா அவரது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், `கலகலப்பு-2' கூட்டணியுடன் இணைந்ததில் மகிழ்ச்சி. சுந்தர்.சி-க்கு நன்றிகள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அவ்னி சினிமாஸ் சார்பில் குஷ்பு சுந்தர் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி, காசி, இந்தூர், புனே மற்றும் ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெறுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com