தயாரிப்பாளர் ஆனார் 'நான் கடவுள்' ராஜேந்திரன்

சினிமாவில் நாயகன் அகிலும் தயாரிப்பாளர் ராஜேந்திரனும் ஜெயித்தார்களா இல்லையா விரைவில் தெரிய வரும் !
தயாரிப்பாளர் ஆனார் 'நான் கடவுள்' ராஜேந்திரன்
Published on

அறிமுக நாயகன் அகில் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் 'சதுரங்கவேட்டை' நடிகை இஷாரா நாயர், ரஹானா, சஹானா, கிருஷ்ணபிரியா என்ற புதுமுகம் ஆகிய நான்கு பேர் இந்த படத்தின் நாயகிகளாக நடிக்கிறார்கள். மேலும் 'நான் கடவுள்' ராஜேந்திரன், மனோபாலா, பாலாசிங், சிவசங்கர், சூப்பர் சுப்பராயன், கௌசல்யா, ஷகீலா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள்.

ஸ்டண்ட் நடிகராக இருந்த ராஜேந்திரன், இயக்குனர் பாலாவின் 'நான் கடவுள்' படத்தின் மூலம் நடிகரானார். அதன் பின்னர் விஜய், அஜித் உள்பட பிரபலங்களின் படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ராஜேந்திரன் தயாரிப்பாளர் ஆகியுள்ளார். நிஜத்தில் அல்ல, அவர் நடிக்கும் அடுத்த படமான  “எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா“ என்ற படத்தில் தயாரிப்பாளர் கேரக்டரில் 'நான் கடவுள்' ராஜேந்திரன் நடிக்கவுள்ளார்.
ரஹிம்பாபு ஒளிப்பதிவில், வர்ஷன் இசையில், சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தை கெவின் இயக்குகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com