மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன் - நகுல்

செய் படம் கதாநாயகனாக நடித்திருக்கும் நகுல், நானும் படக்குழுவினரும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார். #Sei #Nakkhul
மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன் - நகுல்
Published on

பாய்ஸ் படம் மூலம் அறிமுகமானாலும் காதலில் விழுந்தேன் படம் மூலம் கதாநாயகன் ஆனவர் நகுல். தனது பெயரை நக்குல் என்று மாற்றி ‘செய்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

மன்னு தயாரித்திருக்கும் இந்த படத்தில் நக்குல், அன்ஷால் முன்ஜால், பிரகாஷ்ராஜ், நாசர், அஞ்சலி, பிளாரன்ட் பெரைரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு கதை திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் ராஜ்பாபு.

‘செய்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. படத்தின் நாயகன் நக்குல் பேசுகையில், நவம்பர் 16-ம் தேதி ‘செய்’ படம் வெளியாகும் என்றும், தமிழகத்தில் 150 ஸ்கிரீனில் வெளியாகும் என்றும் உறுதியளித்தார்கள். நாங்கள் அதனை ஏற்றுக்கொண்டு விளம்பரப்படுத்துவதில் கவனம் செலுத்தி வந்தோம். ஏனெனில் படத்தின் தயாரிப்பாளர் புதிது. இயக்குநரும் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். அதற்காக யாருடைய மனதும் புண்படுத்த வேண்டாம் என்று காத்திருந்து, நவம்பர் 16-ம் தேதியை ஒப்புக்கொண்டோம்.

ஆனால் இன்று எதிர்பாராத வகையில் நவம்பர் 16-ம் தேதியன்று படம் வெளியாகும். ஆனால் எங்களிடம் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி 150 சென்டர்களில் படம் வெளியாகாது என்றும், அந்த தேதியில் விஜய் ஆண்டனி நடித்த ‘திமிரு புடிச்சவன் ‘என்ற படமும் வெளியாகும் என்றும் சொன்னார்கள். இதனால் நாங்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறோம். திட்டமிட்டப்படி, செய் 150 ஸ்கிரீனில் வெளியாகுமா? ஆகாதா? என்ற மன உளைச்சலுக்கும் ஆளாகியிருக்கிறோம்.

X

Maalai Malar
www.maalaimalar.com