தனுஷ் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறாரா நாகார்ஜுனா?

தனுஷ் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் நாகார்ஜுனா நடிக்க பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தனுஷ் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறாரா நாகார்ஜுனா?
Published on

தனுஷ் நடிப்பில் தற்போது ‘மாரி 2’ உருவாகி வருகிறது. பாலாஜி மோகன் இயக்கி வரும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தை அடுத்து தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ள புதிய படத்தை இயக்கி, நடிக்கவுள்ளார் தனுஷ். இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் தனுஷுடன் நாகார்ஜுனாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடை பெற்று வருகிறது.

"முதலில் சிரஞ்சீவியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், அவர் தற்போது நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்கள் நடைபெறவுள்ளதால், அவரால் உடனடியாக தேதிகள் ஒதுக்க இயலவில்லை என்றும், ஆகையால் நாகார்ஜுனா நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். விரைவில் அவர் ஒப்பந்தம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

சமீபத்தில் கார்த்தியுடன் இணைந்து 'தோழா' படத்தில் நடித்தார் நாகார்ஜுனா. அதனைத் தொடர்ந்து தனுஷ் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார் நாகார்ஜுனா.

X

Maalai Malar
www.maalaimalar.com