ஏப்ரல் 8ம் தேதி நடிகர் சங்கம் கண்டன போராட்டம்

ஏப்ரல் 8ம் தேதி நடிகர் சங்கம் கண்டன போராட்டம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும், மத்திய அரசை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் வருகிற ஏப்ரல் 8ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கண்டன அறவழி போராட்டம் நடைபெற இருக்கிறது.
Published on

சமீபத்தில் நடிகர் சங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில், நடிகர் சங்கத்தில் பொருளாளர் பொன்வண்ணன் பேசும்போது, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும், மத்திய அரசை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கம் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ‘தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் தூத்துக்குடி 'ஸ்டெர்லைட் ஆலை'யை மூட வலியுறுத்தியும் மற்றும் 'காவிரி மேலாண்மை வாரியம்' மத்திய அரசு உடனடியாக அமைக்க கோரியும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 08.04.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 9மணி முதல் மதியம் 1மணி வரை கண்டன அறவழி போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளது. இந்த கண்டன அறவழி போராட்டத்தில் திரைப்பட துறையை சார்ந்த அனைவரும் பங்கேற்குமாறு வேண்டுகிறோம்." இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.

தற்போது நடைபெற்று வரும் ஸ்டிரைக்கால், புதுப்படங்கள், படப்பிடிப்பு ஏதும் நடத்தப்படாததால் முன்னணி நடிகர்கள் அனைவரும் கலந்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com