நாடோடிகள்-2 படப்பிடிப்பு - புதிய தகவல்

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகும் `நாடோடிகள்-2' படத்தின் படப்பிடிப்பு குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. #Naadodigal2 #Sasikumar
நாடோடிகள்-2 படப்பிடிப்பு - புதிய தகவல்
Published on

இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளிவந்த `நாடோடிகள்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது.

இந்நிலையில், `நாடோடிகள்' படத்தின் இரண்டாம் தற்போது உருவாகி வருகிறது. மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் இந்த படத்தில் சசிகுமார் - அஞ்சலி நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். பரணி, அதுல்யா, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் படத்தின் இயக்குநர் சமுத்திரகனியும் நடிக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்காக சசிகுமார், சமுத்திரக்கனி இருவரும் உடல் எடையை குறைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தேனி உள்ளிட்ட பகுதிகளில் நடந்த முடிந்தது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வருகிற 9-ஆம் தேதி மதுரையில் துவங்கி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. 

11-ஆம் தேதி பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட உள்ள ஒரு பாடல் காட்சியில் படத்தில் உள்ள அனைத்து நட்சத்திரங்களும் பங்கேற்கிறார்கள், ஏராளமான துணை நடிகர்கள், நடனக் கலைஞர்கள் பங்கேற்கும் இந்த பாடல் காட்சி பல லட்சம் ரூபாய் செலவில் படமாக்கப்பட இருக்கிறது.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். #Naadodigal2 #Samuthirakani #Sasikumar 

X

Maalai Malar
www.maalaimalar.com