நாடோடிகள் 2 - சூர்யாவை அழைத்த சமுத்திரக்கனி

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் - அஞ்சலி - அதுல்யா நடிப்பில் உருவாகி வரும் `நாடோடிகள்-2' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வெளியிட இருக்கிறார். #Naadodigal2 #SasiKumar
நாடோடிகள் 2 - சூர்யாவை அழைத்த சமுத்திரக்கனி
Published on

சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் கடந்த 2009-ஆம் ஆண்டு வெளிவந்த `நாடோடிகள்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது. இந்த நிலையில், `நாடோடிகள்' படத்தின் இரண்டாம் தற்போது உருவாகி இருக்கிறது.

படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சூர்யா வருகிற ஜூலை 2-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிட இருப்பதாகவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் இந்த படத்தில் சசிகுமார் - அஞ்சலி நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். பரணி, அதுல்யா, எம்.எஸ்.பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஒரு முக்கிய வேடத்தில் சமுத்திரகனியும் நடிக்கிறார். 

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஏகாம்பரம் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். படம் வருகிற ஆகஸ்ட் இறுதியில் திரைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. #Naadodigal2 #Samuthirakani #Sasikumar 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com