

கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அன்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரிக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமெளலி’.
இந்த படத்தில் கார்த்திக், அவருடைய மகன் கவுதம் கார்த்திக் உடன் முதல் முறையாக இணைந்து நடிக்கிறார். ரெஜினா நாயகியாகவும், வரலெட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்திலும் நடிக்கிறார்கள். இயக்குனர்கள் மகேந்திரன், அகத்தியன் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். சதீஷ் ‘காமெடி’ வேடத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பாக்ஸிங் சம்பந்தப்பட்ட காட்சிகள் நேற்று படமாக்கப்பட்டது. இரவு, பகல் என அதற்காக தொடர்ந்து 18 மணிநேரம் படக்குழு வேலைபார்த்ததாக கூறப்படுகிறது. படத்தின் டீசர் விரைவில் வெளியாக இருப்பதாக இயக்குநர் திரு அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
காதல் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்படும் என்று இயக்குநர் திரு தெரிவித்துள்ளார்.