பண மோசடி செய்ததாக சினிமா தயாரிப்பாளர் மனைவியுடன் கைது

பட தயாரிப்புக்காக வெங்கடேஸ்வரன் என்பவரிடம் வாங்கிய பணத்தை திருப்பி தரமறுத்ததால், தயாரிப்பாளர் ஸ்ரீதர் மனைவியுடன் கைதாகியுள்ளார்.
பண மோசடி செய்ததாக சினிமா தயாரிப்பாளர் மனைவியுடன் கைது
Published on

தாம்பரம் சானடோரியம் துர்கா நகரை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன். சினிமா பட துணை தயாரிப்பாளர். இவர் 2015-ம் ஆண்டு நங்கநல்லூர் பட தயாரிப்பாளர் ஸ்ரீதருடன் இணைந்து ஆவிகுமார் என்ற படத்தை தயாரித்து வெளியிட்டார்.

பட தயாரிப்புக்காக வெங்கடேஸ்வரன் ரூ.40 லட்சம் கொடுத்தார். ஆனால் தயாரிப்பாளர் ஸ்ரீதர் பட லாபத்தொகையை தர வில்லை என்று பழவந்தாங்கல் போலீசில் வெங்கடேஸ்வரன் கடந்த மாதம் புகார் செய்தார்.

மேலும் கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் வெங்கடேஸ்வரன் நேற்று ஸ்ரீதர் வீட்டுக்கு சென்று பணம் குறித்து கேட்டார். அப்போது அவரிடம் ஸ்ரீதர், அவரது மனைவி புஷ்பலதா, மகன் யஷ்வந்த் ஆகியோர் வாக்குவாதம் செய்தனர்.

வெங்கடேஸ்வரன் தாக்கப்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து அவர் பழவந்தாங்கல் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் பண மோசடி மற்றும் தாக்குதல் தொடர்பாக தயாரிப்பாளர் ஸ்ரீதர், அவரது மனைவி புஷ்பலதாவை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com