பாலியல் குற்றச்சாட்டு - லீனா மணிமேகலைக்கு ஆதரவாக அமலாபால்

இயக்குனர் சுசி கணேசன் மீது லீனா மணிமேகலை கூறிய குற்றச்சாட்டை நான் ஆதரிக்கிறேன் என்று நடிகை அமலாபால் அறிக்கை வெளியிட்டுள்ளார். #Amalapaul #MeToo
பாலியல் குற்றச்சாட்டு - லீனா மணிமேகலைக்கு ஆதரவாக அமலாபால்
Published on

‘மீ டூ’  மூலம் பிரபல நடிகைகள், பாடகிகள் உள்ளிட்ட பலர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவுகளை ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர். அந்த வரிசையில் கவிஞரும், ஆவணப்பட இயக்குநருமான லீனா மணிமேகலை, பிரபல இயக்குனர் சுசிகணேசன் மீது பாலியல் குற்றச்சாட்டை கூறியிருந்தார்.

ஆனால் இந்த குற்றச்சாட்டை சுசிகணேசன் மறுத்தார். மேலும் பொய்யான குற்றச்சாட்டை கூறியதாக வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், நடிகை அமலாபால் லீனா மணிமேகலைக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ‘நான் லீனா மணிமேகலையின் இயக்குனர் சுசி கணேசனின் மீதான குற்றச்சாட்டை ஆதரிக்கிறேன். பெண்ணியத்துக்கு சிறிதளவும் மரியாதை தர தெரியாத ஒரு மனிதரிடம் துணை இயக்குனராக அந்த பெண் என்ன பாடுப்பட்டு இருப்பாள் என்பது எனக்கு புரிகிறது.

நான் அவர் இயக்கிய ‘திருட்டு பயலே 2’ படத்தின் கதாநாயகியாக இருந்தாலும், இயக்குனர் சுசி கணேசனுடைய இரட்டை அர்த்தம் தொனித்த பேச்சு, முகம் தெரியா யாருக்கோ அவர் கூறும் பரிந்துரைகள், காரணம் இல்லாமல் உடை ஒட்டு உரசும் மனப்பான்மை என பல்வேறு சங்கடங்களை நான் சந்தித்து இருக்கிறேன். இதை வைத்தே லீனா மணிமேகலை என்ன பாடுபட்டு இருப்பார் என்பதை நான் அறிகிறேன்.

அந்த கொடுமையை சமூக வலைதளங்கள் மூலம் அவர் வெளியில் சொல்லி இருப்பதற்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். 

இன்றைய பொருளாதார நிலையும், பெருகி வரும் வேலைக்கென்று வரும் பெண்களின் தொகையும், பெண்களை ஒரு எளிய இரையாக்கி விடுகிறது. அங்கிங்கு எனாது படி அனைத்து தொழிகளிலும், துறைகளிலும் இந்த கொடுமை நடந்து வருகிறது.

தங்களது மனைவியையும், மகள்களையும் போற்றி காப்பாற்றும் இதே ஆண் சமுதாயம், வெளியே மற்ற பெண்களிடம் தங்களது ஆதிக்க மனப்பான்மையை செலுத்துவது துரதிர்ஷ்டமானது.

இதுவே இந்தியர்களாகிய நாம் நம்முடைய உண்மையான ஆற்றலை கலை, சேவை மற்றும் ஆன்மீக துறைகளில் வெளிப்படுத்தும் தன்மையை ஊனமாக்குகிறது.

ஆன்மீக துறையிலும், கலை துறையிலும் இருந்து பல உண்மைகள் வெளிவர துவங்கி உள்ளது. இதே போல மற்ற துறைகளிலும், குறிப்பாக அங்கீகரிக்க படாத மற்ற துறைகளில் இருந்தும், மீடூ குறித்த பதிவுகள் வெளிவர வேண்டும்.

அரசாங்கமும், நீதி துறையும் எதிர்காலத்தில் இவ்வித கொடுமைகள் நடக்காமல் இருக்க வேண்டி, பெண்களுக்கு தொழில் பாதுகாப்பு முன்னிட்ட பல அம்சங்களை சட்ட ரீதியாக அமல் படுத்த வேண்டும். அவ்விதமான கட்டுப்பாடுகளே பெண்களை போத பொருளாக சித்தரிக்கும் சிலருக்கு எச்சரிக்கை மணியாகும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com