அனுஷ்காவுக்கு திருமண தடை நீங்க கோவிலில் விசேஷ பூஜை

திருமண தடை நீங்க நடிகை அனுஷ்கா கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் சிறப்பு பூஜை செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
அனுஷ்காவுக்கு திருமண தடை நீங்க கோவிலில் விசேஷ பூஜை
Published on

அனுஷ்காவுக்கு ஜாதகத்தில் தோஷம் இருப்பதாகவும் அதனாலேயே திருமணம் கைகூடாமல் தள்ளிப்போகிறது என்றும் ஜோதிடர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து திருமண தடை நீங்க, அனுஷ்கா கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் சிறப்பு பூஜை செய்தார். இந்த கோவிலுக்கு அனுஷ்கா வருவதை ரகசியமாக வைத்து இருந்தனர். சிறப்பு வழியில் செல்லாமல் கையில் பூஜை பொருட்கள் அடங்கிய தட்டுடன் பக்தர்கள் கூட்டத்தோடு அவர் வரிசையில் நின்றார்.

முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு வசதி எதையும் அவர் கேட்கவில்லை. அனுஷ்காவுடன் தாயார் பிரபுல்லா ராஜ் ஷெட்டி, சகோதரர் குணரஞ்சன் ஷெட்டி ஆகியோரும் சென்று இருந்தனர். கோவில் சன்னதி அருகில் வந்தபிறகுதான் பூசாரிகளுக்கு அவரை அடையாளம் தெரிந்தது. தட்டை வாங்கி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். திருமண தடை நீங்குவதற்காக இந்த பூஜை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் மங்களூரில் உள்ள துர்கா பரமேஸ்வரி கோவிலுக்கு சென்றும் திருமண தடை நீங்க பூஜை செய்தார். ஆனால் அனுஷ்காவின் தந்தை திருமண தடை நீங்குவதற்காக இந்த பூஜைகளை நடத்தவில்லை என்று மறுத்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com