சிம்புக்காக இணையும் மங்காத்தா கூட்டணி

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் `மாநாடு' படத்திற்காக மங்காத்தா கூட்டணி இணையவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #STRinMaanaadu #VP9
சிம்புக்காக இணையும் மங்காத்தா கூட்டணி
Published on

சிம்பு தற்போது சுந்தர்.சி. இயக்கத்தில் `வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் `மாநாடு' படத்தில் நடிக்க இருக்கிறார்.

சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு அடுத்த ஆண்டு பிப்ரவரி 3-ஆம் தேதி  துவங்கவிருக்கிறது. இதற்கிடையே படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற கதாபாத்திரங்கள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆக்‌ஷன் கிங் அர்ஜூனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் அர்ஜூன் இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அர்ஜூன் ஏற்கனவே வெங்கட் பிரபு இயக்கத்தில் மங்காத்தா படத்தில் போலீசாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அர்ஜூன் இணையும் பட்சத்தில் மங்காத்தா கூட்டணி இணைவது உறுதியாகும். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #STRinMaanaadu #VP9 #STR #Maanadu #Arjun

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com