மாயவன்

சி.வி.குமார் இயக்கத்தில் சந்தீப் கி‌ஷன், லாவண்யா திரிபாதி, ஜாக்கி ஷெராப் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாயவன்’ படத்தின் முன்னோட்டம்.
மாயவன்
Published on

திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் ‘அட்டகத்தி’, ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘தெகிடி’ படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். இவர், கே.ஈ.ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து இயக்கும் படம் ‘மாயவன்’.

இதில் நாயகனாக சந்தீப் கி‌ஷன், நாயகியாக லாவண்யா திரிபாதி நடிக்கிறார்கள். இவர்களுடன் டேனியல் பாலாஜி, இந்தி நடிகர் ஜாக்கி‌ஷரப், பகவதி பெருமாள், மைம்கோபி, ஜே.பி,சிறப்பு தோற்றத்தில் அக்ஷாரா கவுடா உள்பட பலர் நடிக்கிறார்கள். 

ஒளிப்பதிவு - கோபி அமர்நாத், இசை - ஜிப்ரான், எடிட்டிங் - லியோஜான்பால், கலை - கோபி ஆனந்த், ஸ்டண்ட் - ஹரிதினேஷ், தயாரிப்பு - சி.வி.குமார், கே.ஈ.ஞானவேல் ராஜா, திரைக்கதை, வசனம், நலன் குமாரசாமி, கதை, இயக்கம் - சி.வி.குமார்.

இது ஒரு சீரியல் கில்லர் தொடர்பான கதை. நாயகன் சந்தீப் ஒரு சைகோ கொலையாளியை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாகவும், நாயகி லாவண்யா கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்கும் உளவியல் நிபுணராகவும் நடிக்கிறார்கள். இந்தி நடிகர் ஜாக்கி‌ஷரப் ராணுவ அதிகாரியாக நடிக்கிறார்.

படம் பற்றி கூறிய சி.வி.குமார், “பல வெற்றிப்படங்களை தயாரித்துக் கொண்டு இருந்தேன். இந்த கதை என்னை கவர்ந்ததால் இயக்குனர் ஆகிவிட்டேன். இது அனைவரும் விரும்பும் படமாக இருக்கும்” என்றார்.

செப்டம்பர் ரிலீஸாக வேண்டிய படம், பைனான்சியர் - தயாரிப்பாளர் பிரச்சனையால் ரிலீஸ் தாமதமான நிலையில், படம் வருகிற 14-ஆம் தேதி ரிலீசாக உள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com