

இந்நிலையில், கம்பெனி புரொடக்ஷன்ஸ் இணை தயாரிப்பாளர் பைனான்சியர் அன்புச் செழியன் மீது குற்றம்சாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து பலரும் அன்புச்செழியனுக்கு எதிராகவும், ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அன்புச்செழியனும் தற்போது தலைமறைவாகி இருக்கிறார்.
இந்நிலையில், மாயவன் படத்தை வெளியிட கோபுரம் பிலிம்ஸ் தடையில்லா சான்றிதழ் வழங்கியிருக்கிறது. இதுகுறித்து சி.வி.குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது,
கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி போலீஸ் கமிஷினர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தேன். அதில், மாயவன் படத்தை வெளியிட கோபுரம் பிலிம்ஸ் தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும், தான் அளித்த ஆவணங்கள் அனைத்தையும் திரும்ப வழங்க வேண்டும் என்று கூறியிருந்தேன். அதற்கான சாட்சிகளையும் போலீசாரிடம் சமர்ப்பித்தேன். இந்நிலையில், இன்று (நவம்பர் 27) கோபுரம் பிலிம்ஸ் சார்பில் ரவி பிரசாத் லேப்பில் வைத்து தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து ஆவணங்களையும் திரும்ப வழங்கவும் உத்தரவாதம் அளித்துள்ளனர். எனவே இந்த வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். படம் விரைவில் வெளியாகும்.