அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் இடையே காதல்

அமாவாசை அன்று பிறந்த நாயகனுக்கும், பெளர்ணமி அன்று பிறந்த நாயகிக்கும் இடையே காதலை சொல்லும் ‘143’ படம் இம்மாதம் வெளியாக இருக்கிறது.
அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் இடையே காதல்
Published on

நாயகிகளாக பிரியங்கா ஷர்மா, நட்சத்திரா இருவரும் அறிமுகமாகிறார்கள். அனுபவ நடிகர்களான விஜயகுமார், கே.ஆர்.விஜயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார்கள். மற்றும் சுதா, ராஜசிம்மன் பிதாமகன் மகாதேவன், நெல்லைசிவா இவர்களுடன் சதீஷ் சந்திரா பாலேட் முக்கிய வேடம் ஏற்றிருக்கிறார். ஆர்.பி.எம். சினிமாஸ் ராகுல் இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.

படத்தைப் பற்றி இயக்குனர் ரிஷி கூறும்போது, ‘காதல், காமெடி, பேமிலி சென்டிமென்ட் கலந்த ஒரு கலவைதான் இந்த 143. காதல் படம் என்றாலே ரசிகர்களிடையே ஒரு தனி ரசனை இருக்கும், அப்படி ரசிக்கும் படியான காதல் கதை தான் இது. கிராமத்து பின்னணியிலும், நகரத்து பின்னணியிலும் திரைக்கதை நகரும். எனக்கு அப்பாவாக விஜயகுமார் நடித்திருக்கிறார். அந்த அப்பா சென்டிமென்ட் காட்சிகள் அனைத்து இளைஞர்களுக்கும் நிச்சயம் பிடிக்கும்.

X

Maalai Malar
www.maalaimalar.com