நடிப்பில் நிறைய கற்றுக்கொண்டேன்: ஷிவதா நாயர்

‘நெடுஞ்சாலை’, ‘அதே கண்கள்’ படத்தில் நாயகி, தற்போது நடித்து வரும் `கட்டம்' படத்தின் கதை மூலம் நடிப்பில் நிறைய கற்றுக்கொண்டதாக ஷிவதா நாயர் கூறியிருக்கிறார்.
நடிப்பில் நிறைய கற்றுக்கொண்டேன்: ஷிவதா நாயர்
Published on

ஐ கிரியேட் ஒண்டர் பிலிம்ஸ் சார்பில் சத்யா ஜனா தயாரித்துள்ள படம் ‘கட்டம்’.

‘நெடுஞ்சாலை’, ‘அதே கண்கள்’ படங்களில் நடித்த ஷிவதா நாயர் இதில் நாயகியாக நடித்துள்ளார். அவருடன் புதுமுகம் நந்தன், நிவாஸ் சேர்ந்து முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘முரண்’ படத்தை இயக்கிய ராஜன்மாதவ் இதை இயக்கி உள்ளார். இதில் நடித்தது குறித்து ஷிவதா கூறுகிறார்....

“இது ரசிகர்களுக்கு முற்றிலும் புது வகையான சினிமா. சமுதாயத்தை காக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஒருவன் செய்யும் மாபெரும் தவறுக்காக, முற்றிலும் எதிர்பாராத வகையில் அவன் பழிவாங்கப்படுவதே கதை. எனது பாத்திரம் சவாலாக இருந்தது. இந்த கதாபாத்திரம் மூலம் நடிப்பில் நான் நிறைய கற்றுக் கொண்டேன்.

இந்த படத்தின் கதை, திரைக்கதை பின்னப்பட்டுள்ள விதமும், எதிர்பாராத அதிரடி திருப்பங்களும் ரசிகர்களை சீட்டின் நுனியிலேயே வைத்திருக்கும். இந்த சவாலான கதையில் என்னுடன் பிரதான கதாபாத்திரங்களில் புதுமுகம் நந்தன், நிவாஸ் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர். அவர்களது உழைப்பும் நடிப்பும் பேசப்படும். நான் பெரிதும் எதிர்பார்க்கும் இந்த படம் எனது சினிமா வாழ்வில் மிக முக்கியமான படமாக இருக்கும்’’ என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com