கொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பற்றிய அறிவிப்பு

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் சசிகுமார் - மடோனா
கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் சசிகுமார் - மடோனா
Published on

‘சுந்தரபாண்டியன்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். இதில் சசிகுமார் கதாநாயகனாக நடித்திருந்தார். தற்போது மீண்டும் சசிகுமாரை வைத்து ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் சசிகுமாருக்கு ஜோடியாக மடோனா செபஸ்டியன் நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், இப்படத்தின் ‘பேசாதே மொழியே...’ என்ற பர்ஸ்ட் சிங்கிள் பாடலை பிப்ரவரி 28ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்தர் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு திபு நிணன் தாமஸ் இசையமைக்கிறார். டான் போஸ்கோ படத்தொகுப்பை கவனிக்கிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com