கும்பகோணம் குணாவான கிஷோர்

தோழர் அரங்கன் இயக்கத்தில் கும்பகோணம் குணாவாக கிஷோர் நடிக்கும் ‘கதிர்’ படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி வருகிறது.
கும்பகோணம் குணாவான கிஷோர்
Published on

கும்பகோணத்தில் பஸ் ஸ்டாண்ட் குணா என்பவர், அனைவரும் தெரிந்தவராக இருந்த ஒருவர். நிஜத்தில் வாழ்ந்த கும்பகோணம் குணாவாக, இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் கிஷோர் நடிக்கிறார். இவரை எதிர்த்து மோதும் சங்கிலி வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில், 8 முறை குங்ஃபு-வில் பிளாக் பெல்ட் வாங்கிய மாஸ்டர் ராஜநாயகம் வில்லனாக நடிக்கிறார். கிஷோர் - மாஸ்டர் ராஜநாயகம் மோதும் ஆக்‌ஷன் காட்சிகள் அனைத்தும் ஹாலிவுட்க்கு நிகராக எடுக்கப்பட்டு வருகிறது.

புதுமுகங்கள் விஷ்வா, நீரஜா நாயகன், நாயகியாக நடிக்க, இவர்களுடன் கிஷோர், மாஸ்டர் ராஜநாயகம், கஞ்சா கருப்பு, கோலி சோடா பாண்டி, சுப்புராஜ், பசங்க சிவக்குமார், செந்தி, சிந்து, பருத்திவீரன் சுஜாதா, புதுமுகம் சங்கவி ஆகியோர் நடிக்கிறார்கள்.

சேரண் பாண்டியன் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த செளந்தர்யன் இசையமைக்கும் 50-வது படமாக இப்படம் உருவாகிறது. இப்படத்தின் ஒரு பாடலுக்கு முன்னணி நாயகி ஒருவர் நடனம் ஆட இருக்கிறார்.

சமூக அக்கறையோடு வாழும் ஒரு இளைஞனின் வாழ்க்கையில் காதல் கடந்து போனால், என்ன நடக்கும் என்பதை எதார்த்தத்தோடும், தமிழ் கலாச்சார பண்பாட்டோடும் தோழர் அரங்கன் இப்படத்தை உருவாக்கி வருகிறார்.

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் தோழர் அரங்கன், தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்கள் பலரிடம் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

ஆர்.வேல் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு தேசிய விருது பெற்ற ராஜா முகமது படத்தொகுப்பு செய்ய, மிரட்டல் செல்வா சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். ஆர்.எம்.நந்தகுமார் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com