அவரைத் தவிர யார் இயக்கினாலும் சரியாக இருக்காது - கியாரா அத்வானி

காஞ்சனா படத்தின் இந்தி ரீமேக்கான ‘லட்சுமி பாம்ப்’ படத்தில் நடித்து வரும் கியாரா அத்வானி, அவரைத் தவிர யார் இயக்கினாலும் சரியாக இருக்காது என்று கூறியுள்ளார்.
அவரைத் தவிர யார் இயக்கினாலும் சரியாக இருக்காது - கியாரா அத்வானி
Published on

​​தமிழில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற காஞ்சனா படத்தை இந்தியில் ‘லட்சுமி பாம்ப்’ என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார்கள். இப்படத்தை தமிழில் எழுதி இயக்கிய ராகவா லாரன்ஸ் தான் இந்தியிலும் இயக்குகிறார். சில வாரங்களுக்கு முன்பு நடந்த ஒரு சின்ன மனக்கசப்பில் இந்த படத்தை தான் இயக்கவில்லை என்று லாரன்ஸ் அறிவித்தார். அவர் அறிவித்த உடனே பட குழுவினரும், படத்தின் கதாநாயகன் அக்‌‌ஷய் குமாரும் ராகவா லாரன்சுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அவர்களின் அன்பை ஏற்ற லாரன்ஸ் மீண்டும் படத்தை இயக்க ஆயத்தமானார்.

படத்தின் கதாநாயகி கியாரா அத்வானி இதைப்பற்றி கூறும் போது, ‘அவர் மறுபடியும் இப்படத்தை இயக்க ஒப்புக் கொள்வார் என்று நம்பி காத்திருந்தேன். அவரும் அப்படியே சம்மதித்தார். அவரே இப்படத்தை இயக்க மிக சிறந்த நபர். ஏனென்றால் அவர் இப்படத்தின் ஒரு பகுதியை இயக்கி முடித்து விட்டார். மீதியை யார் இயக்கினாலும் அது சரியாக இருக்காது. மேலும் லாரன்ஸ் மாஸ்டர் ஆச்சர்யம் நிறைந்த ஒரு அற்புதமான மனிதர். இப்படத்தை தமிழில் அவரே இயக்கி நடித்தும் இருக்கிறார்.

மக்களும் படத்தைக் கொண்டாடி இருக்கிறார்கள். ஆக இப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் அவரது விலை மதிப்பில்லா சொத்து என்று தான் சொல்ல வேண்டும். இப்போது நாங்கள் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக ஆவலோடு காத்திருக்கிறோம்“ என்றார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com