வார்த்தைக்கு வார்த்தை அவரை அண்ணா என்று தான் அழைக்கிறேன் - கீர்த்தி சுரேஷ்

ஹரி இயக்கியிருக்கும் சாமி ஸ்கொயர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ், வார்த்தைக்கு வார்த்தை அவரை அண்ணா என்று தான் அழைக்கிறேன் என்று கூறினார். #SaamySquare #Vikram
வார்த்தைக்கு வார்த்தை அவரை அண்ணா என்று தான் அழைக்கிறேன் - கீர்த்தி சுரேஷ்
Published on

ஹரி இயக்கத்தில் விக்ரம் - கீர்த்தி சுரேஷ் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில்  சாமி ஸ்கொயர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், சூரி, ஹரி, தேவி ஸ்ரீ பிரசாத், சிபு தமீன்ஸ் உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ் பேசும் போது,

நேரத்தை எப்படி சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை ஹரி சார் படத்தில் நடித்தால் கற்றுக்கொள்ள முடியும். தயாரிப்பாளர் பாராட்டும் இயக்குநர் ஹரி சார் தான். ஹரி சார் தயாரிப்பாளர்களின் இயக்குநர். ஹரி சார் இருக்கும் போது சாமி ஸ்கொயர் படத்தில் செட்டே பரபரப்பாக இருக்கும். யாருமே சாதாரணமாக இருக்க மாட்டார்கள். மற்ற படங்களில் பணிபுரியும் போது ஒரு சிறிய தூக்கத்தை போடலாமா என்று நினைக்க ஒரு சிறிய இடைவேளையாவது இருக்கும். ஆனால் ஹரி இயக்கும் படத்தில் அதை நினைக்க கூட முடியாது. 

தொடக்கத்தில் இருந்து சூரி அண்ணாவை பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவரை எனது சொந்த அண்ணனாகவே பார்க்கிறேன். வார்த்தைக்கு வார்த்தை அண்ணா, அண்ணா என்று அழைப்பது சூரி அண்ணாவை தான். இந்த படத்தில் எனக்கும், சூரி அண்ணாவுக்கும் நிறைய காட்சிகள் உள்ளது. பேசவே பயமாக இருக்கிறது. 

ஐஸ்வர்யா ராஜேஷ் இப்போது தான் எனது ரசிகையாகி இருக்கிறார். காக்கா முட்டை படத்தில் இருந்தே நான் அவரது ரசிகை. மிகச்சிறந்த நடிகை. நாங்கள் இணைந்து நடிக்கவில்லை. ஆனால் ஒரே படத்தில் இணைந்து நடித்திருக்கிறோம். 

அந்நியன் படத்தின் போது ரெமோவாக விக்ரம் சாரை ரசித்தேன். தற்போது அவருடன் இணைந்து நடித்திருப்பதில் மகிழ்ச்சி. சாமி முதல் பாகம் போலவே இரண்டாவது பாகத்திலும் இருக்கிறார். ஹரி சார் மாதிரியே துறுதுறுவென்று இருப்பார். இந்த படத்தின் மூலம் என்னை பாடகியாக அறிமுகப்படுத்திய தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு நன்றி. இவ்வாறு பேசினார். #SaamySquare #Vikram #KeerthySuresh

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com