5 மொழிகளில் கீர்த்தி சுரேஷ்

தமிழ், தெலுங்கு படங்களை தொடர்ந்து இந்தி மொழியில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷின் படம் 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது.
கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ்
Published on

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையான நடிகையர் திலகம் படத்தில் நடித்து மேலும் பிரபலமானார். தற்போது மைதான் படம் மூலம் இந்தியிலும் அறிமுகமாகி உள்ளார். இதில் அஜய் தேவ்கான் நாயகனாக நடிக்கிறார். அமித் ஷர்மா இயக்குகிறார்.

அஜித்தின் நேர் கொண்ட பார்வை படத்தை எடுத்த போனிகபூர் மைதான் படத்தை தயாரிக்கிறார். 1950-ல் இருந்து 62 வரை இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருந்த சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது. இந்தி மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

ஆசிய விளையாட்டு போட்டியில் வெற்றி பெற இந்திய அணியை வழி நடத்தி சென்றவரை பற்றி அனைத்து மக்களும் அறிய வேண்டும் என்பதற்காகவே 5 மொழிகளில் இந்த படத்தை வெளியிட முடிவு செய்துள்ளோம் என்று படக்குழுவினர் தெரிவித்தனர். மைதான் படம் மூலம் இந்தியில் அறிமுகமாகி இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்று கீர்த்தி சுரேஷ் கூறி உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com