இசைவெளியீட்டு விழாவில் நடிகரை வருத்தெடுத்த கே.இ.ஞானவேல் ராஜா

அண்ணா துரை இசைவெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய கே.இ.ஞானவேல் ராஜா நடிகர் ஒருவரை வறுத்தெடுத்திருக்கிறார்.
இசைவெளியீட்டு விழாவில் நடிகரை வருத்தெடுத்த கே.இ.ஞானவேல் ராஜா
Published on

ஜி.ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. விஜய் ஆண்டனி இசையில் பாடல்கள் வெளியாகி இருக்கிறது. அதேநேரத்தில் விஜய் ஆண்டனியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இசை வெளியீட்டு விழாவில் ராதிகா சரத்குமார், விஜய் ஆண்டனி, டயானா சாம்பிகா, ஜுவல் உள்ளிட்ட படக்குழுவினருடன் கே.பாக்யராஜ், சரத்குமார் உதயநிதி ஸ்டாலின், கே.இ.ஞானவேல் ராஜா, அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதில் ஞானவேல் ராஜா பேசும் போது,

படக்குழுவினரை பாராட்டி பின்னர், நடிகர் ஒருவரை வறுத்தெடுத்தார். சமீபத்தில் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகிய படம் ஒன்று அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. இதனால் அந்த படத்தின் இரண்டாவது பாகத்திற்கான படப்பிடிப்பு நடத்த நடிகரை அந்த படத்தின் தயாரிப்பாளர் பார்க்க 4 மணிநரேமாக காத்திருந்தும் பலனில்லை. மாறாக  நடிகரை தொடர்பு கொண்ட போது ஏற்கனவே எடுத்த காட்சிகளை வைத்து படத்தை முடித்துக் கொள்ளுமாறு நடிகர் கூறிவிட்டாராம். இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே அந்த நடிகர் படப்பிடிப்பிற்கு சரியாக வருவது இல்லை என்று புகார் இருக்கிறது. அதிலும் அந்த படத்தில் நடிக்கும் போது குறிப்பிட்ட நேரம் மட்டுமே படப்பிடிப்பில் இருப்பாராம். அதேபோல் உலகமே அவரது காமெடியை பார்த்து ரசிக்கும் மற்றொரு நடிகர் குறித்தும் புகார் வந்துள்ளது. என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com