ரசிகர்கள் ஆசீர்வாதம் இருந்தால் எல்லாம் நடக்கும்: கத்ரீனா கைப்

இந்தி பட உலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கத்ரீனா கைப், ரசிகர்கள் ஆசீர்வாதம் இருந்தால் எல்லாம் நடக்கும் என்று கூறியுள்ளார்.
ரசிகர்கள் ஆசீர்வாதம் இருந்தால் எல்லாம் நடக்கும்: கத்ரீனா கைப்
Published on
இந்தி பட உலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கத்ரீனா கைப். இந்தி பேசவே தெரியாமல் இந்தி பட உலகில் காலடி வைத்த கத்ரீனா, தற்போது இந்தி சூப்பர் ஸ்டார்களான சல்மான்கான், சாருக்கான், அமீர்கான் படங்களில் நடித்து வருகிறார். இதுபற்றி கூறிய கத்ரீனா கைப்...

“ஒரே நேரத்தில் முன்னணி நடிகர்களுடன் நடிப்பேன் என்று நினைத்து கூட பார்த்தது இல்லை. பொழுதுபோக்காகத் தான் நான் நடிக்க வந்தேன். இப்போது எனக்கு நடிப்பே தொழிலாகி விட்டது.

அதை அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்கிறேன். சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதில் அதிக அக்கறை எடுத்து செயல்படுகிறேன். ரசிகர்களின் ஆதரவும், ஆசீர்வாதமும் இருந்தால் எல்லாம் நடக்கும். அவர்களால் தான் என்னால் இந்த இடத்துக்கு வர முடிந்தது” என்கிறார்.
X

Maalai Malar
www.maalaimalar.com