முதல் முறையாக மகன் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடிக்கும் கார்த்திக்

முதல் முறையாக மகன் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து நடிக்கும் கார்த்திக்

கவுதம் கார்த்திக் நடிப்பில் ‘ஹரஹர மஹாதேவகி’ படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், கவுதம் கார்த்திக்கின் அடுத்த படத்தில் அவரது தந்தையும், நடிகருமான கார்த்திக் முதல்முறையாக இணைந்து நடிக்க இருக்கின்றனர்.
Published on

‘நான் சிகப்பு மனிதன்’ பட இயக்குனர் திரு இயக்கவிருக்கும் அந்த படத்தில் ‘நவரச நாயகன்’ கார்த்திக், கவுதம் கார்த்திக் முதல்முறையாக இணைந்து நடிக்க இருக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

கவுதம் கார்த்திக் நடிப்பில் ‘ஹரஹர மஹாதேவகி’ திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

கார்த்திக் அவர்களை அவரின் மகனும் இணைந்து நடிக்கும் படி பலர் கேட்டும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை. ஒரு நல்ல கதை அமைந்தால் மட்டுமே இணைந்து நடிப்பதாக இருந்தவர் இயக்குசர் திரு கதை சொல்லிய உடன் நடிக்க சம்மதம் தெரிவித்தார். அனேகன் படத்தின் மூலம் மீண்டும் வரவேற்பை பெற்ற கார்த்திக் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யாவுடன் இணைந்து தாகா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார்.

கார்த்திக் - கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கவிருக்கும் இப்படத்தில் அவர்களுடன் இரண்டு பிரபல கதாநாயகிகளும் மற்றும் பல பிரபல நடிகர்களும் இப்படத்தில் நடிக்க உள்ளனர்.

இப்படத்தின் தலைப்பு மற்றும் மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com