கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் துல்கர் சல்மான், ரீத்து வர்மா நடிப்பில் உருவாகி இருக்கும் `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தின் முன்னோட்டம்.
துல்கர் சல்மான், ரீத்து வர்மா
துல்கர் சல்மான், ரீத்து வர்மா
Published on

துல்கர் சல்மானின் 25-வது படமாக உருவாகி இருக்கிறது `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'. தேசிங்கு பெரியசாமி இயக்கியுள்ள இந்த படத்தில் துல்கர் ஜோடியாக ரீத்து வர்மா நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் தொலைக்காட்சி பிரபலம் ரக்‌ஷன் மற்றும் நிரஞ்சனி அகத்தியன் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு மசாலா காஃபி என்ற மியூசிக் பேண்ட் குழுவினர் இசையமைத்துள்ளனர். கே.எம்.பாஸ்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படம் குறித்து இயக்குனர் தேசிங் பெரியசாமி பேசுகையில், ''இது ஒரு பயணம் சார்ந்த காதல் கதை. எல்லா தரப்பட்ட எமோஷன்களும் இக்கதையில் உள்ளன. மிக பெரிய இளைஞர் ரசிகர் பட்டாளம், குறிப்பாக பெண் ரசிகர் பட்டாளம் உள்ள ஒரு ஹீரோ துல்கர் சல்மான். இக்கதைக்கு அவரை விட பொருத்தமான ஹீரோ யாருமில்லை. அவரது நடிப்பாலும், வசீகரத்தாலும் இப்படத்தை வேற லெவெலுக்கு கொண்டு செல்வார் என நம்புவதாக அவர் கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com