கார்கள் மோதியதால் தகராறு: கன்னட நடிகருக்கு கத்திக்குத்து

கார்கள் மோதியதால் ஏற்பட்ட தகராறில் கன்னட நடிகர் குருராஜ் ஜக்கேஷ்க்கு கத்திக்குத்து விழுந்தது.
கார்கள் மோதியதால் தகராறு: கன்னட நடிகருக்கு கத்திக்குத்து
Published on

குருராஜ் ஜக்கேஷ் தனது மகனை ஆர்.டி.நகரில் உள்ள பள்ளியில் கொண்டு சென்று விடுவதற்காக காரில் அழைத்து சென்றார்.

மதனஹள்ளி சாலையில் சென்றபோது வேகமாக வந்த கார் ஒன்று குருராஜ் ஜக்கேஷ் கார் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.

இதனால் அந்த காரை குருராஜ் விரட்டி சென்று மடக்கினார்.

காரை ஓட்டிய வாலிபரிடம் வாக்குவாதம் செய்தார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் காரில் இருந்த கத்தியை எடுத்து குருராஜ் ஜக்கேஷ் வயிற்றில் குத்த முயன்றார்.

உடனே குருராஜ் ஜக்கேஷ் விலகியதால் அவரது தொடையில் கத்திக்குத்து விழுந்தது. உடனே அந்த வாலிபர் காரில் ஏறி தப்பிவிட்டார்.

ரத்த காயத்துடன் குருராஜ் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்தார். அவரை போலீசார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து கார் எண்ணை கண்டுபிடித்தனர்.

விசாரணையில் காரை ஓட்டியது சிவசங்கர் என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

இதுகுறித்து குருராஜ் ஜக்கேஷ் கூறுகையில், அந்த வாலிபர் காரில் கத்தியை ஏன் வைத்து இருந்தார் என்று இன்னும் யோசித்து கொண்டிருக்கிறேன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com