கமலின் பாடல் வரிகளை தலைப்பாக்கிய படக்குழு

நடிகர் கமலின் மிகவும் பிரபலமான பாடல் வரிகளை தன்னுடைய படத்திற்கு தலைப்பாக வைத்திருக்கிறார் இயக்குனர் வெங்கட் ரமணன்.
Published on

கமல் நடிப்பில் வெளியான படம் ‘குணா’. இந்த திரைப்படத்தில் ‘கண்மணி...’ எனத் தொடங்கும் பாட்டில் ‘அதையும் தாண்டி புனிதமானது...’ என்ற பாடல் வரி இடம் பெறும். இந்த வரியை படத் தலைப்பாக கொண்டு புதிய படம் ஒன்று உருவாக உள்ளது.

‘அப்பா வேணாம்ப்பா’ என்கிற படத்தில் குடி குடியை கெடுக்கும் என்கிற சமூக விழிப்புணர்வு கருத்தை வலியுறுத்தி பாராட்டுக்களை பெற்றவர் நடிகரும் இயக்குனருமான வெங்கட்ரமணன். இவர் அடுத்ததாக ‘அதையும் தாண்டி புனிதமானது' என்கிற படத்தை இயக்கவுள்ளார்.  இப்படத்திற்கான பூஜை சமீபத்தில்போ டப்பட்டுள்ளது.

கணவனுக்கும் மனைவிக்குமான புரிதல் எப்படி இருந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்கிற கருத்தை மையப்படுத்தி இந்தப்படத்தை இயக்குகிறார். முற்றிலும் புதுமுகங்கள் நடிக்கவுள்ள இந்தப்படம் முழுக்க கமர்ஷியல் படமாக உருவாக இருக்கிறது.. 

வெங்கட் ரமணன் இயக்க இருக்கும் இப்படத்திற்கு வி.கே.கண்ணன் இசையமைக்கிறார். இந்தப்படத்தில் முக்கிய சிறப்பம்சம், சினிமாவை சாராத, அதேசமயம் சமூகத்தில் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் பத்து பேர் வெங்கட்ரமணனுடன் இணைந்து இந்தப்படத்தை தயாரிக்கின்றனர். படப்பிடிப்பை வரும் ஜனவரி மாதம் துவங்கி மே மாதம் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com