வருக புதுயுகம் படைக்க - பொதுமக்களுக்கு கமல்ஹாசன் அழைப்பு

நாளை தனது அரசியல் பயணத்தை தொடங்கவிருக்கும் கமல்ஹாசன் நடத்தும் முதல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று புது யுகம் படைக்க வருமாறு பொதுமக்களுக்கு கமல் அழைப்பு விடுத்திருக்கிறார். #KamalhaasanPoliticalEntry
வருக புதுயுகம் படைக்க - பொதுமக்களுக்கு கமல்ஹாசன் அழைப்பு
Published on

நடிகர் கமல்ஹாசன் தீவிர அரசியலில் களமிறங்க இருக்கிறார். நாளை ராமேசுவரத்தில் உள்ள மறைந்த அப்துல்கலாம் வீட்டில் இருந்து கமல் தனது அரசியல் பயணத்தை தொடங்கவிருக்கிறார். அங்கிருந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொள்ள இருக்கிறார். 

நாளை தனது கட்சிப் பெயர், கொடி, கொள்ளை உள்ளிட்டவற்றை தனது ரசிகர்கள் முன்பு நாளை அறிவிக்கிறார். பின்னர் நாளை மாலை 6.30 மணிக்கு மதுரையில் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் இரவு 8 மணி முதல் 9 மணி வரை கமல் உரையாற்றுகிறார். இந்த கூட்டத்தில் பங்கேற்கும்படி பொதுமக்களுக்கு கமல்ஹாசன் அழைப்பு விடுத்திருக்கிறார். இதுகுறித்து டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது,

`நாளை துவங்கவுள்ளது நம் நெடும் பயணம். நாளை மாலை 6 மணிக்கு மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தில் நமது கட்சிக் கொடியை ஏற்றவுள்ளேன். புதிய கட்சியின் பெயரையும் எமது கொள்கையின் சாராம்சத்தையும் விளக்கவுள்ளேன். வருக வருக புது யுகம் படைக்க' என்று குறிப்பிட்டிருக்கிறார்.  

சமீபத்தில் கமல், கருணாநிதி, ரஜினிகாந்த், விஜயகாந்த், சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சிப் பிரபலங்கள் பலரையும் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #KamalhaasanPoliticalEntry

X

Maalai Malar
www.maalaimalar.com